Monday 16 September 2013


அன்புமகளூக்கு 

எனது அன்னையின் மறுபிறப்பே!
அன்புபெட்டகமே!
பாரம்பர்யகொடியே!

எனக்கு தொப்புள்
கொடிஉறவாய்
திரும்பவந்தவளே !

எனதுபால்யத்தின்
திருத்தியமறுபதிப்பாய்
வந்த மறுபிறப்பே !

எனதுதாய்மைக்கடனை
பெற்று சமன்செய்த
சாமந்தியே !

என்னைநான் காண்கின்றேன்
உந்தன் செயல்களீலே
அதேபிடிவாதங்களில்

உணவில் தொடங்கி
உடைகள்வரை
எந்தன் அச்சு

அதனால்தானோ 
அடிக்கடி மோதல்
உனக்கும் எனக்கும்

ஆனாலும் தீராஅன்பு
என்மேலுனக்கு

பினக்குகளின் நடுவேயும்

இன்றும் மூஞ்சை தூக்கிக்கொண்டு
மூலையில் அமர்ந்திருக்கின்றாய்

மூடு அவுட்டாகி

மூவெட்டுவருடம் 
பின்செல்கின்றது
எனக்கு காட்சிகள்

மூடவுட்டாவதும் 
மூலையிலமர்வதும்
என்சொத்தல்லவா ரசிக்கின்றேன்....

தலைசாய்த்துகதைகேட்பதும்
தாயின் முகம் தாங்கி
காரியம் சாதிப்பதும் கூட

சிரிப்புத்தான் வருகின்றது
உனதுசெயல்கள் அனைத்தும்
கோபம் உட்பட

ஆனாலும் உன்னை 
அதிகமாகத்தான்கோபித்துவிட்டேன்
சலைக்காமல் நீயும்

வா...மகளே வா...உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்
கண்டு மகிழ்வோம்.....சண்டைபோட்டாலும்..கூட........
கண்களில் நீருடன் உன் அம்மா......

No comments:

Post a Comment