Tuesday 28 July 2015

பிரிவதுபோல் பிதற்றுகிறாய்
உன் இதழ்பிரித்து
கூடிப்பிரியும்குறைவான 
நிமிடங்களில்
மீண்டும்கூடுதல்வேண்டி
சேடிகள் செப்பிய
காதல்கதைகள் 
சிந்தையைஆட்கொள்ள
பேதையாய் வேண்டுகிறாய்
பிரியாதிருக்கவேண்டி
கோதிவிடும் குழலை
சரியவிட்டு
தாமரைமொட்டுபோல்
இதழ்குவிக்கிறாய்
இதழ்கள் விரித்து
புன்னகைத்து குவித்து
முத்தமிடுகிறாய்
இதழ்களில் இருந்து
சிந்தும் நீர்த்துளி 
என்னிதழ்மேல்
இடம்பெயறகூடிக்களிக்கும்
குறையா ஆசைகளுடன்
தேடித்தினம் பேசும்
காதல் கதையெல்லாம்
தெரிந்துகொள்ளுமாவலில்

No comments:

Post a Comment