Tuesday 28 July 2015

நாணேற்றும் கலையில்
நல்லதோர்கலைஞன் நீ
அற்புதமாகசுருதிசேர்க்கிறாய்
மயிலின் இறகாய்
(ச)ரிக்கிறாய்
தேன்சிட்டின் ஒலியாக 
(ரீ)ங்காரமிடும்முத்தமிடுகிறாய்
ஆட்டுக்கிடாய்போல்
(க)னமானமான் முட்டுகிறாய்
அழகாய்பறந்துவந்து
கொத்தும்நாரையாய்
(ம)னதை வருடுகிறாய்
இனிமையான நைட்டிங்கேல்
பறவைபோல்
(ப)றவுகிறாய்
அற்புதமான புரவியாய் 
(தா)க்குகிறாய் இளம் களிறைப்போல்
என்னை
(நி)தானமாய் ஆட்கொள்ளுகிறாய்
சட்ஜமத்தில் தொடங்கி 
ரிஸ்பமாகவிரிந்து
காந்தாரத்தில் லீலைகள் புரிந்து
மத்யமத்தில் நின்று களித்து
பஞ்சமம்தொட்டுபரவசப்படுத்தி
தைவதத்தில் ஆனந்தப்படுத்தி
நிசாதத்தில் மெல்லியமுத்தமிட்டு
உன் வாசித்தலில் என்னை
வாசித்துமகிழவைத்து
மகிழ்கிறாய் இசைகலைஞனாய்.....

No comments:

Post a Comment