Saturday 10 October 2015

புருசன் போய்சேந்துட்டாரு
அவர்விட்டுட்டுப்போனது
இந்தமெக்கானிக்சாப்பு
எனக்கு அவரு இருக்கும்போது
கத்துக்கத்தோணல
அவரு பாத்துப்பாருன்னு
வேடிக்கைபாத்தேன்
அவருபோனப்ப 
கலங்கிப்போய்நின்னென்
எல்லாரும்
என்னவேடிக்கைதான் பாத்தாங்க
அன்னிக்கி முடிவு பண்ணி
கத்துக்கிட்டேன் 
பொம்பளையால முடியுமான்னு
கேலி பண்ணாங்க....முடியும்னு
பண்ணிக்காமிச்சேன் ஆனா
இப்போ மறுபடியும் 
கலங்கிபோய்நிக்குறேன்
மோட்டார்வாகன சட்டதிருத்தமாம்
எங்களைமாதிரி ஆளுக
இதப்பண்ணக்கூடாதாம்
கம்பெனிக்காரன் தான் பண்ணனுமாம்
நாங்கபண்ணி ஆக்ஸிடண்ட் ஆனா
இன்ஸீரனஸ் கெடைக்காதாம்
சட்டம் போடப்போறாகலாம்
அப்பொ எங்க கெதி.......
நாளைக்கு அதுக்குத்தான்
ஸ்ட்ரைக்காம்
என் பொழப்பு ஒருநாள் போகுதுதான்
ஆனா நிரந்தரமா போய்டப்புடாதுல்ல
இந்தக்கடையில் அவரு
என்னோட இருக்காருன்னு
நம்புறேன் இதை விடமுடியாது
ஏதாவது பண்ணியாகனும்.....
இல்ல பொழப்பு போய்டும்.........

No comments:

Post a Comment