Saturday 10 October 2015

இது என்னம்மா
இதுஏன் இங்கபோட்டிருக்கு
இதுக்குப்பேரு
மூக்குத்தியா
காதிலதொங்குதே
அதுஜிமிக்கியா
உனக்குமட்டும்
எப்படிம்மா எல்லாமே
அழகாஇருக்குது
எனக்குஏம்மாபோடல
மூக்குலஓட்டபோடனுமா
ஒனக்குப்போடும்போது
வலிக்கலயா
அப்புறம் எனக்குஏன்
போடமாட்டேன்ற
எனக்கும் வலிக்காதும்மா
நீதாஇருக்கிறாயே 
எல்லாத்தையும்என்னயும்
சேத்துதாங்குறதுக்கு....

No comments:

Post a Comment