Saturday 10 October 2015

சொற்களில் அக்கினிவாசம்
காதோரக்கதைகளில்
கவிதைவாசம்
மீட்டும் தொணியில்
தொண்டைஉலர்ந்தவார்த்தைகள்
காற்றோடுகலந்து
எரியும்தீக்குச்சியாய்
மூச்சுகாற்று சுடும்படியாக
கன்னம்தீய்க்கிறது
விழிகளெல்லாம்
எரிந்துகசிகின்றது
அலைஅலையாய்
பரவசம்பரவுகின்றது
உதடுகளில்தொடங்கி
உள்ளம்தொட்டு
உடலெங்கும்சிலிர்த்தபடி
சூழந்தமேகம் சுற்றிவளைத்து
கொட்டத்தொடங்குகிறது
இடியுடன் மழையாய்
தரைநனைந்தவுடன்
கிளம்பும் மண்வாசம்
சுற்றத்தைநிறைக்கிறது
அடர்ந்தமழையில்
மூச்சுமுட்டநனைந்து
வெக்கையாய் வழிகிறது
வியர்வைமண்வாசனையை
மீறுகிறது மழைவாசனை
மொத்தவெப்பமும்
அடங்கிபெருமூச்சாய்
வெளியேறுகிறது
ஆன்மாவின் ஆனந்தம்..........

No comments:

Post a Comment